காஷ்மீர்: ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு லாரியில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு லாரியில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள சலாமாபாத் வர்த்தகச் சந்தைக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட மரப் பெட்டிகளை போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அந்த பெட்டிகளில் 66 கிலா எடையுடைய ஹெராயின், ப்ரவுன் சுகர் ஆகிய போதைப் பொருள்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.300 கோடி என்று போலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com