குடியரசுத் தலைவர் தேர்தல்: தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தபோதிலும், இதுவரை தோல்வியடைந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற சாதனையை மீரா குமார்
குடியரசுத் தலைவர் தேர்தல்: தோற்றாலும் சாதனை படைத்த மீரா குமார்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்தபோதிலும், இதுவரை தோல்வியடைந்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் என்ற சாதனையை மீரா குமார் சொந்தமாக்கியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் 10.69 லட்சம் வாக்குகள் பதிவாயின. அவற்றில் 3.67 லட்சம் வாக்குகள் மீரா குமாருக்கு கிடைத்தன. இதற்கு முன்பு 1967-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே. சுப்பா ராவ், 3.63 லட்சம் வாக்குகள் பெற்றதே, தோல்வியடைந்த வேட்பாளர் பெற்ற அதிகபட்ச வாக்காக இருந்தது. இந்த 50 ஆண்டு சாதனையை காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமார் முறியடித்துள்ளார்.
எனினும், அப்போது பதிவான வாக்குகளில் கே. சுப்பா ராவ் 43 சதவீத வாக்குகளைப் பெற்றார். சதவீத அடிப்படையில் அதுவே இப்போது வரை சாதனையாகத் தொடர்கிறது. தற்போது மொத்தம் பதிவான வாக்குகளில் 34 சதவீதத்தை மட்டுமே மீரா குமார் பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 66 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், அவருக்கு 70 சதவீத வாக்குகளைப் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com