மூத்த குடிமக்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்: ஜேட்லி தொடங்கி வைத்தார்

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை (வய வந்தனா யோஜ்னா) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை (வய வந்தனா யோஜ்னா) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தை 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்கள், அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீத வட்டி என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தை அருண் ஜேட்லி, தில்லியில் வெள்ளிக்கிழமை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:
பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதற்கான உலகில் நாம் வாழ்கிறோம். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் குறைந்த வட்டியில் கடன்களை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு குறைந்த வட்டியில் கடன் வழங்கினால், பொருளாதாரத்தில் அதன் தாக்கத்தை தவிர்க்க இயலாது.
மூத்த குடிமக்கள், அதிக ஆபத்தில்லா முதலீடுகளையும், நியாயமான வட்டித்தொகையையும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்காக, கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு மூத்த குடிமக்களிடையே பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அருண் ஜேட்லி கூறினார்.
இந்தத் திட்டத்தில் 58,152 மூத்த குடிமக்களை எல்ஐசி நிறுவனம் சேர்த்துள்ளது. அவர்கள், ரூ.2,70 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com