நீட்: அனைத்து மொழிகளிலும் ஒரே கேள்வித்தாள்: பிரகாஷ் ஜாவடேகர்

நீட் (மருத்துவப் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு) கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
நீட்: அனைத்து மொழிகளிலும் ஒரே கேள்வித்தாள்: பிரகாஷ் ஜாவடேகர்

நீட் (மருத்துவப் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு) கேள்வித்தாள் அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களையும், ஹிந்தி தவிர பிற பிராந்திய மொழிகளின் படித்த மாணவர்களையும் வெகுவாக பாதித்து விட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பல மாணவ, மாணவியரின் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு கலைத்துவிட்டது.
மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களிடம் பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் சிபிஎஸ்சி (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்தின்படி கேள்வி கேட்கப்பட்டதுடன், தமிழ், வங்க மொழி, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கேள்விகள் கடினமாக இருந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டிய மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் நீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தியில் கேட்கப்பட்ட கேள்விகளைவிட மற்ற பிராந்திய மொழிகளில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஹிந்தியைத் திணிக்கும் நோக்கில் பிராந்திய மொழிகள் மீது மத்திய அரசு நடத்திய தாக்குதல் இது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள்கள் பிராந்திய மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அவை, ஆங்கில மொழி கேள்வித்தாளில் இருந்து ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com