ஓட்டுநர் இல்லாத கார்: இந்தியாவில் அனுமதிக்க முடியாது

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல்
ஓட்டுநர் இல்லாத கார்: இந்தியாவில் அனுமதிக்க முடியாது

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
ஓட்டுநர் இல்லாத கார்களை அனுமதிப்பது, வேலையின்மை பிரச்னைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இதொடர்பாக, தில்லியில் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். ஓட்டுநர் தட்டுப்பாடு நிலவுவதை, வாடகைக் கார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
இந்தச் சூழலில், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கார்களை இந்தியாவில் அனுமதிக்கும் திட்டம் அரசுக்கு கிடையாது. ஓட்டுநர் இல்லாத கார்களை அனுமதிப்பது, வேலையின்மை பிரச்னைக்கு வழிவகுக்கும். வேலைவாய்ப்பை பறிக்கும் தொழில்நுட்பத்தையும், கொள்கைகையும் மத்திய அரசு ஊக்குவிக்காது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவிக்கும். அதேசமயம் அந்த வாகனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதிக்காது. அதற்குப் பதிலாக, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்குமாறு முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தும்.
இதுதவிர, 1.8 லட்சம் புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தி, பொதுப் போக்குவரத்துத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது வருகிறது. அதன்படி, லண்டன் போக்குவரத்து ஆணைய மாதிரியைப் பின்பற்றி, நாடு முழுவதும் புதிய சொகுசு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், பேருந்து கட்டணமும், தற்போதைய கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே இருக்கும் என்பதால், சாமானிய மக்களும் அந்தப் பேருந்துகளில் பயணம் செய்யலாம். பொதுமக்கள் தங்கள் பயணத்துக்கான வாகனங்களைத் தேர்வு செய்யும் வகையில், பொது இணையதளம் ஒன்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com