சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது

சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தனது பாதுகாப்பு நலன்களைக் காக்க சீனா எந்த விலையையும் கொடுக்கும். இந்த விவகாரத்தில், இந்தியா அதிர்ஷ்டத்தையோ அல்லது மாயையும் நம்பியிருக்கக் கூடாது. சீனப் பகுதிக்குள் ஊடுருவி இந்தியா தவறு செய்துள்ளது. அந்த தவறையும், அத்துமீறி மிரட்டல்கள் விடுத்திருப்பதையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும்' என்றார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ ஹாங் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் இருதரப்பு விவகாரம் குறித்து பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை சூசகமாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், கடந்த கால பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டின்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சீன பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய பகுதிக்குள் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்துகிறது. இருதரப்புக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சீனா முன்வைக்கும் நிபந்தனை இது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிக்கிம் எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2 மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது.பெய்ஜிங், ஜூலை 24: சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது.
இதுதொடர்பாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தனது பாதுகாப்பு நலன்களைக் காக்க சீனா எந்த விலையையும் கொடுக்கும். இந்த விவகாரத்தில், இந்தியா அதிர்ஷ்டத்தையோ அல்லது மாயையும் நம்பியிருக்கக் கூடாது. சீனப் பகுதிக்குள் ஊடுருவி இந்தியா தவறு செய்துள்ளது. அந்த தவறையும், அத்துமீறி மிரட்டல்கள் விடுத்திருப்பதையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும்' என்றார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் லூ ஹாங் செய்தியாளர்களிடம் பேசியபோது, தங்கள் நாட்டுக்கு வருகை தரவுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் இருதரப்பு விவகாரம் குறித்து பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதை சூசகமாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இரு நாட்டு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களும் பரஸ்பரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலாது. ஆனால், கடந்த கால பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டின்போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் சட்டவிரோதமாக சீன பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்திய பகுதிக்குள் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்துகிறது. இருதரப்புக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, சீனா முன்வைக்கும் நிபந்தனை இது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிக்கிம் எல்லையில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2 மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com