சீனா, பாக். விவகாரத்தில் எந்த நாடும் இந்தியாவை ஆதரிக்கவில்லை

சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் எந்த நாடும் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
சீனா, பாக். விவகாரத்தில் எந்த நாடும் இந்தியாவை ஆதரிக்கவில்லை

சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் எந்த நாடும் இந்தியாவை ஆதரிக்க முன்வரவில்லை என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியின் 2-ஆவது பகுதி திங்கள்கிழமை வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
காஷ்மீரில் பாகிஸ்தானால் அமைதியின்மை நிலவுகிறது. மற்றொரு புறம் சிக்கிம் எல்லைப் பகுதியான டோக்லாமை கைப்பற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்த நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறார். இருப்பினும், இந்த இரு நாடுகளின் விவகாரங்களிலும் உலக நாடுகள் நம்மை (இந்தியா) வெளிப்படையாக ஆதரிக்க முன்வரவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.
சீனா, பாகிஸ்தான் நாடுகளைக் காட்டிலும் சிவசேனையை மிகப் பெரிய எதிரியாக பாஜக கருதினால் அது துரதிருஷ்டவசமானதாகும். சீனாவின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. அந்நாட்டு ராணுவத்துக்கு சரிசமமாக நமது ராணுவத்தின் பலத்தையும் அதிகரிக்க வேண்டும். உள்கட்சி விவகாரம், தேர்தல்கள் ஆகியவற்றில் மட்டும் மத்தியில் ஆளும் பாஜக கவனம் செலுத்தி வருமேயானால், அது நமது தேசத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
பாகிஸ்தான் பிடியிலிருந்து காஷ்மீரை மீட்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், மற்றொரு புறம் நமது எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது என்று உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மோடியுடன் கலந்துரையாடியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'அப்போது என்னை மோடி அன்புடன் வரவேற்றார். குடும்பத்தினர் குறித்தும் அவர் நலம் விசாரித்தார். மராத்தியில் அவர் என்னுடன் உரையாடியது மகிழ்ச்சி அளித்தது' என்றார் உத்தவ் தாக்கரே. சாம்னாவில் அவரது பேட்டியின் முதல் பகுதி ஞாயிற்றுக்கிழமை வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com