விமான பயணத்திற்கு ஆதார் எண் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!

விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமான பயணத்திற்கு ஆதார் எண் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம்!

புதுதில்லி: விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இனிமேல் விமான பயணத்துக்காக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கிறபோது, அவர்களுடைய ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படுகிறது என்றும்,  அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் பயணிகள் கையை ‘ஸ்கேன்’ செய்யும் பொழுது , கைரேகைகள் ஒப்பிடப்படும் என்றும், இதன்மூலம் எந்த விதமான பாஸ்போர்ட் மோசடிகளுக்கும் நடக்க இனி சாத்தியம் இல்லை என்றும் கடந்த மே மாதம் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று  நடந்தது. இந்த கூட்டத்தில் ஆதார் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் எம்.பி.க்கள் எழுப்பிய பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.

அப்பொழுது மத்திய அரசு விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் குறித்துக் கேள்வி எழுந்த பொழுது , அப்படி எந்த ஒரு திட்டமும் கிடையாது என தெரிவிக்கப்பட்ட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com