சாதனை புரிய ஏழ்மை தடையல்ல: மம்தா பானர்ஜி

சாதனை புரிய ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கன்னியாஸ்ரீ' திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பின் விருது கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் கொல்கத்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மாநில முதல்
மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'கன்னியாஸ்ரீ' திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பின் விருது கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் கொல்கத்தா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மாநில முதல்

சாதனை புரிய ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பெண் குழந்தைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட "கன்னியாஸ்ரீ" எனும் திட்டத்துக்காக மம்தா பானர்ஜிக்கு கடந்த மாதம் விருது அளித்து ஐ.நா. சபை கௌரவித்தது. அந்தத் திட்டம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று மம்தா பேசியதாவது:
மாணவர்களுக்கு ஏழ்மை என்பது ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதை கடந்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கல்லூரிகளில் முதுகலைப் படிப்பில் சேரும் இளம்பெண்களுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.2,500 வரை வழங்கப்படும். குறிப்பிட்ட துறையில் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை பல்கலைக்கழக மானியக் குழு நிறுத்தியதை அடுத்து, ஆய்வு மாணவர்களுக்கு உதவுவதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் மம்தா.
இந்த நிகழ்ச்சியில் யுனிசெஃப் அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக் பங்கேற்றார்.
மேற்கு வங்க அரசு மீது மேனகா காந்தி தாக்கு: மத்திய அரசின் "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற திட்டத்தை அமல்படுத்த மேற்கு வங்கம் அரசு மட்டும்தான் மறுத்துவிட்டது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
மக்களவையில் கேள்விநேரத்தின்போது, "கன்னியாஸ்ரீ" திட்டத்துக்கு ஐ.நா. விருது கிடைத்திருப்பதாகவும், மற்ற மாநில அரசுகள் அந்தத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மிரிகங்கா மஹதோ தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர் மேனகா காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com