புதுச்சேரி உள்பட 29 நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட 29 நகரங்களில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி உள்பட 29 நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட 29 நகரங்களில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் தலைநகர் தில்லி, பாட்னா (பிகார்), ஸ்ரீநகர் (ஜம்மு}காஷ்மீர்), கொஹிமா (நாகாலாந்து), புதுச்சேரி, குவாஹாட்டி (அஸ்ஸாம்), காங்டாக் (சிக்கிம்), சிம்லா (ஹிமாசலப் பிரதேசம்), டேராடூன் (உத்தரகண்ட்), இம்பால் (மணிப்பூர்), சண்டீகர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம், மிக அதிகம் உள்ள பகுதிகளை பிரிவு 4, பிரிவு 5 என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வகைப்படுத்தியுள்ளது. இதில், மேற்கண்ட நகரங்கள் 4 மற்றும் 5}ஆவது பிரிவின் கீழ் வந்துள்ளன.
இமயமலையும் அது சார்ந்த பகுதிகளும் உலகிலேயே நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடமாக ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இப்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள நகரங்களில் பெரும்பாலானவை இமயமலை அருகே அமைந்துள்ள இடங்களாகும். இந்த நகரங்களில் ஒட்டுமொத்த மக்கள்தொகை 3 கோடிக்கும் அதிகமாகும். எனவே, நிலநடுக்கம் ஏற்பட்டால் உயிர்ச்சேதமும், பொருள் சேதமும் அதிகமிருக்கும்.
மாநில ரீதியாகப் பார்க்கும்போது பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு}காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத்தின் கட்ச் பகுதி, பிகாரின் வடபகுதி, அந்தமான் நிகோபார் ஆகியவை நிலநடுக்க ஆபத்து மிக அதிகமுள்ள 5}ஆவது பிரிவின் கீழ் வந்துள்ளன.
தில்லி, ஜம்மு}காஷ்மீரின் ஒருபகுதி, சிக்கிம் உள்ளிட்டவை அதிக நிலநடுக்க ஆபத்துள்ள 4}ஆவது பிரிவின்கீழ் உள்ளன. சண்டீகர், பஞ்சாபின் அமிருதசரஸ் ஆகிய நகரங்களுக்கும் நிலநடுக்க ஆபத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com