சஹாரன்பூர் கலவரம்: தேசிய சிறுபான்மையினர் நல ஆணையர் விரைவில் ஆய்வு

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தேசிய சிறுபான்மையினர் நல ஆணையரும், அதன் உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று அடுத்த வாரம்

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தேசிய சிறுபான்மையினர் நல ஆணையரும், அதன் உறுப்பினர்களும் அப்பகுதிக்குச் சென்று அடுத்த வாரம் ஆய்வு நடத்தவுள்ளனர்.
சஹாரன்பூரில் இருவேறு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதல் தொடர் வன்முறையாக உருவெடுத்து வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். 25 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் நல ஆணையராக சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்ற சுலேகா கும்பரே, ஆணைய உறுப்பினர்களுடன் இந்த விவகாரம் தொடர்பாக கலந்தாலோசித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த வாரம் சஹாரன்பூருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். அங்குள்ள கள நிலவரம் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதுடன், வன்முறையால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்தும் மதிப்பீடு செய்ய உள்ளோம். இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான உறவுப் பாலமாக தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com