ரூ.2 லட்சத்தை ரொக்கமாக பெறுவோருக்கு 100% அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை எச்சரிக்கை

ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரூ.2 லட்சத்தை ரொக்கமாக பெறுவோருக்கு 100% அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை எச்சரிக்கை

ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாக பெறுவோருக்கு 100 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் மூலம், ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கமாகப் பரிவர்த்தனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை, நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வருமான வரிச் சட்டத்தின் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் 269-எஸ்டி பிரிவில் ஒரே நாளில் மேற்கண்ட தொகையை ஒரே பரிவர்த்தனையாகவோ அல்லது ஒரு நிகழ்ச்சி தொடர்பான பரிவர்த்தனைக்கோ அல்லது தனிநபருக்கோ அளிப்பதற்கோ தடை விதித்துள்ளது.
இந்நிலையில், முன்னணி செய்தித் தாள்களில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வருமான வரிச்சட்டத்தின் 269-எஸ்டி பிரிவை மீறுவோருக்கு, அவர் எவ்வளவு தொகையை ரொக்கமாக பெறுகிறாரோ, அதே தொகை அபராதமாக விதிக்கப்படும்; அதேநேரத்தில், அரசு, நிதி நிறுவனம், தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று ரூ.2 லட்சம் அல்லது அதை விட அதிக தொகையை ரொக்கமாக யாரேனும் பெறுவது குறித்து பொது மக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால், அதை வருமான வரித்துறைக்கு blackmoneyinfo@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபட்டாலும், அதுகுறித்தும் மேற்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த விளம்பரங்களில் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, ரூ.3 லட்சத்துக்கும் அதிக தொகையை ரொக்கமாக பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். எனினும், ரூ.3 லட்சம் என்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக பின்னர் குறைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com