அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பதவிக்காலம் நீட்டிப்பு

மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உள்ளிட்ட சட்ட
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி பதவிக்காலம் நீட்டிப்பு

புதுதில்லி: மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோத்தகி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உள்ளிட்ட சட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான பிங்கி ஆனந்த், மணிந்தர் சிங், பி.எஸ்.பட்வாலியா, துஷார் மேத்தா மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோருக்கு மத்திய அமைச் சரவையின் நியமனக் குழு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும் 2014 ஜூன் 19 ஆம் தேதி முகுல் 14வது அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. டிரிபிள் தால்க் உட்பட பல முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் வாதிட்டார்.

வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, 1999-இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இந்த மாதத்துடன் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், முகுல் ரோத்தகிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் போலி பேக்கரி மற்றும் ஜாஹிரா ஷேக் வழக்குகள், போலி என்கவுண்டர் மரண வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசின் சார்பில் வாதிட்டார். அம்பானி சகோதரர்களுக்கிடையிலான எரிவாயு பிரச்சினை வழக்குகளில் அனில் அம்பானிக்கு ஆதரவாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com