ஒரு ஈமெயில் பெண்களின் ஸ்கர்ட்டைப் போல சிறியதாக இருக்க வேண்டும்: சர்சையைக் கிளப்பிய பல்கலைக்கழக பாடப்புத்தகம்!

ஒரு ஈமெயில் என்பது பெண்களின் ஸ்கர்ட்டைப் போல சுவாரசியம் உண்டாக்கும் வகையில் சிறியதாக இருக்க வேண்டும் என்று கூறும் தில்லி பல்கலைக்கழக பாடப்புத்தகம் ஒன்று தற்பொழுது சர்சையைக் கிளப்பியுள்ளது.
ஒரு ஈமெயில் பெண்களின் ஸ்கர்ட்டைப் போல சிறியதாக இருக்க வேண்டும்: சர்சையைக் கிளப்பிய பல்கலைக்கழக பாடப்புத்தகம்!

புதுதில்லி: ஒரு ஈமெயில் என்பது பெண்களின் ஸ்கர்ட்டைப் போல சுவாரசியம் உண்டாக்கும் வகையில் சிறியதாக இருக்க வேண்டும் என்று கூறும் தில்லி பல்கலைக்கழக பாடப்புத்தகம் ஒன்று தற்பொழுது சர்சையைக் கிளப்பியுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பெரும்பாலான கல்லூரிகளில் பி.காம் (ஹானரஸ்)  பயிலும் மாணவர்களுக்கு, 'அடிப்படை வியாபார தொடர்பு' என்னும் புத்தகம் பாடப்புத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது. தில்லி கல்லூரி ஒன்றில் வணிகவியல் துறைத் தலைவராக ஒருந்து ஓய்வு பெற்ற கே.சி.குப்தா என்பவர் இந்த புத்தகத்தினை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில்தான் வியாபார ரீதியிலான தொடர்பு முறைகளைப் பற்றிக் கூறும் பொழுது, 'ஒரு ஈமெயில் என்பது பெண்களின் ஸ்கர்ட்டைப் போல சிறியதாக, சுவாரஸ்யமூட்டக் கூடிய வகையிலும், முழுவதுமாக மூடப்பட்டுள்ளது போன்று எல்லா விஷ்யங்களையும் விடாமல் சொல்லும் வகையிலும் இருக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வருந்தத்தக்க ஒரு விஷயம் என்ன என்றால் இந்த புத்தகம் கடந்த  பத்து வருடங்களுக்கு மேலாக அச்சிலிருப்பதுடன், மாணவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது என்பதுதான்.

தற்பொழுது இது தொடர்பாக சர்ச்சை எழுந்தவுடன், நூலின் ஆசிரியர் குப்தா கூறும் பொழுது, 'மக்களின் மனம் புண்பட்டிருக்குமானால் நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சர்ச்சைக்குரிய அந்த மேற்கோளினை நான் ஒருவெளிநாட்டு எழுத்தாளரின் கட்டுரையில் இருந்து எடுத்து பயன்படுத்தினேன். தற்பொழுது நான் அதனை என்னுடைய நூலில் இருந்து நீக்கி விட்டேன். இதற்குப் பிறகு அச்சாக்கும் பிரதிகளில் இருந்து அதனை நீக்க வேண்டுமென்று என் பதிப்பாளருக்கும் அறிவுறுத்தி இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களும் அது உண்டாக்கும் சர்ச்சைகளும் இந்தியாவில் தீராத தொடர்கதையாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com