உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி, அரசு வேலை: சிவராஜ் சிங்

மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்சௌர் மாவட்டத்தில் வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங்
உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி, அரசு வேலை: சிவராஜ் சிங்

மத்தியப் பிரதேச மாநிலம், மன்த்சௌர் மாவட்டத்தில் வன்முறையில் உயிரிழந்த 5 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் உறுதி அளித்தார்.
மன்த்சௌரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்முறையில் காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிதிஉதவி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
"இந்த அறிவிப்பானது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை' என்று பாஜக விவசாயிகள் அணியில் இருந்து விலகிய பிரமுகரும், படிதார் சமூகத் தலைவருமான பிரேம் படிதார் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, ராஷ்ட்ரீய விவசாயிகள் மஸ்தூர் சங்கத்தின் தேசியத் தலைவர் சிவகுமார் சர்மா கூறியதாவது:
விவசாயிகளின் மகன் என்று சௌஹான் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால், விவசாயிகள் போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. வேளாண் துறையில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாக நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் சௌஹான் முதல்வராக பதவி ஏற்றபோது மாநில அரசின் கடன் ரூ.22ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது, ரூ.1.65 லட்சம் கோடியாக உள்ளது என்றார் சிவகுமார் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com