ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்!

கடந்த 18 மாதங்களாக டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் - ஊழல் மிகுந்த
ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்!

கடந்த 18 மாதங்களாக டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் - ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் 18 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல் - லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பொது சேவைகளை பெறுவதற்காக நான்கு பேரில் ஒருவர் லஞ்சம் கொடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

அந்த புள்ளிவிபரம் முழுப் பகுதியிலும் பார்க்கையில், சில தனிப்பட்ட நாடுகளின் லஞ்சங்களின் எண்ணிக்கைகள் அதிர்ச்சியூட்டுபவையாகவும். அன்றாட வாழ்வில் ஊழல் ஆழமாக வேரூன்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

லஞ்ச ஊழல் விகிதங்களால் ஐந்து நாடுகள் மிக அதிக ஊழல் நிறைந்த நாடுகள் குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக லஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறை, கல்வி-பள்ளிகள், மருத்துவமனைகள், ஐடி ஆவணங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் லஞ்சம் அளிக்காமல் எந்த செயலும் நடைபெறுவதில்லை என்றும் இதுபோன்ற லஞ்சத்தால் அரசின் உதவிகள் பெறவேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குறித்த 16 நாடுகளின் கணக்கெடுப்புகளில், வியட்நாமில் (மற்றும் மலேசியா) மக்கள் தங்கள் நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து மிகவும் எதிர்மறையாகவே உள்ளனர். சுமார் 60 சதவீத ஊழியர்கள் லஞ்சத்திற்காக தரம்தாழ்ந்த ஒரு மோசமான வேலையைச் செய்து வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு காவல்துறையில் லஞ்சம் வழங்கப்படுவதாகவும், இதற்காக 10 பேரில் 7 பேர் லஞ்சம் கொடுக்கிறார்கள் எனவும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அனைத்து மட்டங்களிலும் ஊழல், லஞ்சங்களால் அவதிபட்டு வருகிறது. லஞ்சத்தை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்க அதிகாரிகள் மற்றும் தற்போதைய ஆளும் ராணுவ ஆட்சிக்குழுவை சேர்ந்தவர்கள் 2015 ஊழல் எதிர்ப்பு சட்டத்தை பயன்படுத்தி போராடி வருகின்றனர். ஆனால், கடந்த 12 மாதங்களில் 12 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளது. மேலும், ஊழலுக்கு எதிராக பேராடி சுமார் 72 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் 2013 ஊழல் சட்டத்தின் மூலம் லஞ்சம் குறைந்துள்ளதாகவும், காவல்துறை மற்றும் நீதித்துறையில்தான் 40 சதவீதம் ஊழல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலும் அரசு இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஊழல் - லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சி செய்தவர்களும் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் பெறுவதில் சிறந்து விளங்கும் ஐந்து நாடுகளின் லஞ்ச சதவீத விவரம்:
5. மியான்மார்:   40 சதவீதம்
4. பாகிஸாதான்: 40 சதவீதம்
3. தாய்லாந்து:   41 சதவீதம்
2. வியட்நாம்:   65 சதவீதம்
1. இந்தியா:     69 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com