நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ திட்டம்?

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்திருப்பதை அடுத்து, நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ திட்டம்?


புது தில்லி: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்திருப்பதை அடுத்து, நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மருத்துவ மாணவ சேர்க்கைக்காக பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 8ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இன்றைய விசாரணையின் போது சிபிஎஸ்இ பதில் விளக்கம் அளித்திருந்தது. அப்போது, ஜூன் 8ம் தேதியே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தது.

சிபிஎஸ்இ விளக்கத்தை ஏற்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து நாளை மறுநாள் அதாவது ஜூன் 14ம் தேதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com