ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்

சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், திங்கள்கிழமையுடன் பதவி ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்றார் நீதிபதி கர்ணன்

சர்ச்சைக்குரிய உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன், திங்கள்கிழமையுடன் பதவி ஓய்வு பெற்றார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அவர், உச்ச நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் உயர் நீதிமன்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் பிறந்த கர்ணன், கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த தனக்கு சக நீதிபதிகள் சாதிரீதியாகத் தொல்லை கொடுப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் கடந்த 2011-ஆம் ஆண்டில் அவர் புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிற நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறி, அவர் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.
இதையடுத்து, நீதிபதி கர்ணனை கொல்கத்தா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இந்தச் சூழலில், ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி 20 முன்னாள் மற்றும் இந்நாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை கர்ணன் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் மற்றும் 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கர்ணன் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின்கீழ் கர்ணனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 9-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
எனினும், தன்னைக் கைது செய்ய வந்த போலீஸாரின் கையில் சிக்காமல் தப்பிய கர்ணன், இதுவரை கைதாவதைத் தவிர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவரது வழக்குரைஞர்கள் கூறுகையில், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி கர்ணனை சிறைத் தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை அதுகுறித்து பதிலளிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்தச் சூழலில், திங்கள்கிழமையுடன் நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதைத் தொடர்ந்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com