பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார் சுஷ்மா

பாஜக நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.
பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்டார் சுஷ்மா


புது தில்லி: பாஜக நாடாளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.

பாஜக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பாஜக ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருந்த நிலையில், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், முன்கூட்டியே திட்டமிட்டிருந்த சில பணிகள் இருப்பதாகக் கூறி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூட்டத்தில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

முன்னதாக, பாஜகவின் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் போட்டியில் சுஷ்மா சுவராஜ் பெயர் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் போட்டியில் தனது பெயர் இல்லை என்று சுஷ்மாவே நேரடியாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் இருந்து அவர் பாதியிலேயே கிளம்பி சென்றிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com