ஆம்புலன்ஸிற்கு வழிவிட ஜனாதிபதி வாகனத்தை நிறுத்திய போக்குவரத்து காவலர்!

பெங்களூருவின் டிரினிட்டி வட்டத்தில் ஜனாதிபதி வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆம்பலன்ஸ் ஒன்றிற்கு வழி விட்ட போக்குவரத்து காவல் அதிகாரிக்கு பெங்களூர் காவல்துறை விருது வழங்கவுள்ளது.
ஆம்புலன்ஸிற்கு வழிவிட ஜனாதிபதி வாகனத்தை நிறுத்திய போக்குவரத்து காவலர்!

பெங்களூருவின் டிரினிட்டி வட்டத்தில் ஜனாதிபதி வாகனத்தைத் தடுத்து நிறுத்தி ஆம்பலன்ஸ் ஒன்றிற்கு வழி விட்ட போக்குவரத்து காவல் அதிகாரிக்கு பெங்களூர் காவல்துறை விருது வழங்கவுள்ளது.

பெங்களூர் மெட்ரோ சேவை ஒன்றைத் திறந்து வைக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்திருந்தபோது, விழா முடிந்து ராஜ் பவனிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் சிக்கிக் கொண்டு அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வழியில்லாமல் நின்றுக்கொண்டிருந்தது ஆம்புலன்ஸ், அப்பொழுது அப்பகுதியின் போக்குவரத்து காவல் அதிகாரியான எம்.எல்.நிஜலிங்கப்பா என்பவர் அணிவகுத்து வந்த ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி செய்தார்.

அவருடைய இந்தச் செயலானது அப்பகுதி மக்களிடையே மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் அவரை நாயகன் போல் சித்தரித்து பலரது பாராட்டுகளையும் பெற்று தந்திருந்த நிலையில் அவருடைய இந்தச் செயலுக்கு தக்கச் சன்மானம் வழங்கப்படவுள்ளது.

பெங்களூருவின் கிழக்கு பகுதி போக்குவரத்து துணை ஆணையரான அபிசே கோயால் தனது டிவிட்டர் பக்கத்தில் இவரைப் புகழ்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தியாவின் முதல் குடிமகனுக்கு முன்பாக உயிருக்காக போராடிய ஒருவரைக் காக்க ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட போக்குவரத்து அதிகாரி நிஜலிங்கப்பாவின் கடமை உணர்ச்சி பாராட்டிற்கு உரியதுதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com