விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு விரும்புகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு விரும்புகிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு விரும்புகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
விவசாயிகளுக்கு தங்களின் விளைபொருள்களுக்கான உற்பத்திச் செலவை விட 50 சதவீதத்துக்கும் அதிகமான விலையை அளிப்பதாக வாக்குறுதி அளித்தே பாஜக கடந்த 2014-இல் ஆட்சிக்கு வந்தது. எனினும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. இதற்கு பாஜக-வின் வாக்குறுதிகளுக்கும், அக்கட்சி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் காரணம். விவசாயிகளுக்கு விரோதமான இந்த அரசு, விவசாயிகளே இல்லாத இந்தியா வேண்டும் என்று விரும்புகிறது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை விவசாய விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 150 சதவீதமாக உயர்ந்தது. ஆனால், தற்போதைய மோடி அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது 12 சதவீதம் அளவுக்குக் கூட அதிகரிக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் விவசாயத் துறை 4 சதவீத வளர்ச்சியைக் கண்டது. ஆனால், தற்போதைய பாஜக அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வெறும் 1.7 சதவீதமாக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரமும், உத்தரப் பிரதேசமும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யத் தயங்குவது ஏன்? அங்குள்ள மந்த்சௌர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகளை துப்பாக்கிச்சூட்டின் மூலம் படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.
பெருநிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியும் மத்திய அரசு, விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய முன்வரும் மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கத் தயங்குவது ஏன்? மத்திய அரசு இந்தக் கடமையை நிறைவேற்றத் தவறுவதன் மூலம், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நேரத்தில் அது வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியுள்ளது என்றார் சிந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com