பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள், பாகிஸ்தானில் போய் வாழலாம்: கைருல் ஹாசன் ரிஸ்வி

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இந்தியர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் எல்லையை கடந்து செல்ல
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள், பாகிஸ்தானில் போய் வாழலாம்: கைருல் ஹாசன் ரிஸ்வி

புதுதில்லி: பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய இந்தியர்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் அல்லது அவர்கள் எல்லையை கடந்து செல்ல வேண்டும் என தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் கைருல் ஹாசன் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதற்கு இந்திய இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது.

காஷ்மீரிலும் பள்ளத்தாக்கு பகுதியில் ஊர்வலமாக சென்று பாகிஸ்தான் வெற்றியை உள்ளூர் மக்கள் சிலர் கொண்டாடினார். இதற்கு சமூக வலைதளங்களிலும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் கைருல் ஹாசன் ரிஸ்வி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  

அப்போது, பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் கொண்டாடியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரிஸ்வி, பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் கொண்டாடியவர்களின் மனம் மற்றும் இதயம் உண்மையிலேயே பாக்கிஸ்தானில் உள்ளது, உடல்கள் மட்டும் இங்கே உள்ளது. அதனால், அப்படிப்பட்டவர்கள்  பாகிஸ்தான் சென்று வாழலாம் அல்லது எல்லையை கடந்து செல்ல வேண்டும் என்று பதில் அளித்தார்.

பாக்கிஸ்தானின் வெற்றி ரம்ஜான் பண்டிக்கைக்கு முன்பே அவர்களுக்கு அதற்கான மகிழ்ச்சியை கொண்டு வந்துவிட்டது.  இந்தியாவில் வாழும் அவர்கள் பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்றும் கூறுவது துரதிர்ஷ்டவசமானது. இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதுகுறித்து மீரட்டில் நான் கூறியது அடிமன உணர்ச்சிகளிலிருந்து வந்தது என்று கூறினார்.

மேலும்,  தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். ஆணையம் சார்பில் பேசவில்லை என்றார்.

கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னர் பாக்கிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டதாக மத்திய பிரதேசத்தில் 15 பேர், கர்நாடகாவில் 2 பேர் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com