பெண் குழந்தைகளுக்கு கல்வி: மேற்கு வங்க அரசுக்கு ஐ.நா. விருது

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக, மேற்கு வங்க மாநில அரசுக்கு ஐ.நா.வின் அங்கமான பொதுச் சேவைகள் அமைப்பு விருது வழங்கி கெளரவித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் சிறப்பான முறையில் செயல்பட்டதற்காக, மேற்கு வங்க மாநில அரசுக்கு ஐ.நா.வின் அங்கமான பொதுச் சேவைகள் அமைப்பு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இந்த விருதுக்காக, 62 நாடுகளில் இருந்து 552 திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில், மேற்கு வங்க அரசின் பெண் குழந்தைகள் கல்வித் திட்டம் (கன்யாஸ்ரீ பிரகல்பா) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், மேற்கு வங்க அரசு சார்பில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதல் பரிசுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு ஒரு கோப்பையும், சான்றிதழும் அளிக்கப்பட்டது.
விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு பேசிய மம்தா பானர்ஜி, ""இது ஒரு வரலாற்றுச் சாதனை; இந்திய மக்களுக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணம்'' என்று குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்தி, நிலைக்கத்தக்க வளர்ச்சி என்ற இலக்கை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் அடைவதில் தனது அரசு உறுதியாக உள்ளது என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவும், சிறு வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தவும், நிபந்தனைகளுடன் கூடிய உதவித்தொகையோடு கல்வியளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 40 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்குகளில் உதவித்தொகையாக மொத்தம் 50 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,200 கோடி) செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com