அத்வானி போன்ற ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்பார்த்தேன்: சரத் பவார்

மூத்த அரசியல் தலைவர்களான எல்.கே. அத்வானி அல்லது முரளி மனோகர் ஜோஷியைப் போன்ற ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கும் என்று
அத்வானி போன்ற ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்பார்த்தேன்: சரத் பவார்

மூத்த அரசியல் தலைவர்களான எல்.கே. அத்வானி அல்லது முரளி மனோகர் ஜோஷியைப் போன்ற ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.

அதேநேரம், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், மிகச் சரியான தேர்வு என்றும் அவர் பாராட்டினார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துக் கூறிய
தாவது:
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது பாஜக உள்விவகாரம் ஆகும். ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைப் போன்ற தலைவர்களில் ஒருவரைத்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அக்கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.
அதேநேரம், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
அவர், இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.
அத்துடன், 5 முறை மக்களவை எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும், மக்களவைத் தலைவராகவும் பதவி வகித்தவர். அரசியலில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அவர் பெற்றிருக்கும் அனுபவத்தைப் பார்க்கும்போது குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவர் என்பது தெளிவாகிறது என்றார் பவார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத் பவார் அறிவிக்கப்படுவார் என்று ஊகங்கள் வெளியாகியிருந்தன.
அதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு என்னுடைய பெயரை சிலர் பரிந்துரைத்தனர்.
ஆனால், குடியரசுத் தலைவர் பதவிக்காக போட்டியிடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன்' என்றார்.
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "உள்நாட்டுப் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த வேண்டும். எல்லை வழியாக நடைபெறும் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த வேண்டும்' என்று பவார் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com