ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: இந்தியா பதிலடி

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
ஜம்முவின் நெüஷேரா எல்லைப் பகுதியில், இந்திய நிலைகள் மீது கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது.
தானியங்கி கனரக ஆயுதங்களால் சுட்டும், தொலைதூர குண்டுகளையும் வீசியும் பாகிஸ்தான் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் திருப்பிச் சுட்டனர் என்றார் அவர்.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடந்தது இது இரண்டாவது முறையாகும். பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.
முன்னதாக, பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை கடந்த வியாழக்கிழமை ஊடுருவி, இரு இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலின்போது பாகிஸ்தான் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு பக்கபலமாக, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com