லாக்கரில் வைக்கப்படும் பொருள்களுக்கு வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி

பொதுத் துறை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் பொருள்கள் களவு போனால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் பொருள்கள் களவு போனால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் பெட்டகங்களை வாடகைக்கு எடுப்பதற்கான ஒப்பந்தத்தில், இதுதொடர்பான பொறுப்பிலிருந்து வங்கிகள் விடுவிக்கப்பட்டிருப்பதால், களவு போகும் பொருள்களுக்கு வங்கிகள் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் அறியப்படாத இந்த கசப்பான விவரம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வழக்குரைஞர் ஒருவர் மேற்கொண்ட விசாரணையால் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது மனுவுக்கு ரிசர்வ் வங்கியும், கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி உள்ளிட்ட 19 பொதுத் துறை வங்கிகளும் அளித்த பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழக்குரைஞர், இதுகுறித்து நிறுவனங்களுக்கிடையேயான ஆரோக்கியப் போட்டியை உறுதி செய்யும் இந்திய நிறுவனப் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ளார்.
பாதுகாப்புப் பெட்டக சேவை விவகாரத்தில் வங்கிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாகவும், இது நிறுவனங்களுக்கிடையேயான ஆரோக்கியமான போட்டிக்கு எதிரான செயல் எனவும் சிசிஐ-யிடம் அந்த வழக்குரைஞர் முறையீடு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com