சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் ஜூலை 11 வரை நீட்டிப்பு

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரனின் நீதிமன்றக் காவல்

இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லி காவல்துறை தொடுத்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரனின் நீதிமன்றக் காவல் ஜூலை 11}ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகிய இருவருக்கும் தீஸ் ஹஜாரி நீதிமன்றம் ஜூன் 1}ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து, இதேபோன்று தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என சுகேஷ் சந்திரசேகர் ஜூன் 5}ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோன்று ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவையும் தில்லி தீஸ் ஹஜாரி நீதிமன்றம் கடந்த மே 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி முரளிதர் ஜூன் 14}ஆம் தேதி விசாரித்தார். அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், சுகேஷின் வசம் இருந்து நாடாளுமன்ற உறுப்பினருக்கான போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோசடியாக அவர் வைத்துள்ள இந்த ஆவணத்தை மிகச் சாதாரணமான குற்றாகக் கருத முடியாது. இதனால், நாடாளுமன்றப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் நிலவுவதாக நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்க முடியாது. அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) முடிவடைந்தது. இதையடுத்து, தில்லி சுகேஷின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று காவல்துறையின் சார்பில் தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பூனம் செüத்ரி, சுகேஷின் நீதிமன்றக் காவலை ஜூலை 11}ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com