ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு ஜேட்லி கண்டனம்!

நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு ஜேட்லி கண்டனம்!

புதுதில்லி: நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்காத காங்கிரஸ், திமுவுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை மறுநாள் முதல் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான நிகழ்வு நாளை இரவு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மமதா பானர்ஜி முன்பே அறிவித்து விட்டார். அவரைப் போன்றே இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்று அறிவித்தன.

இதற்கு மத்திய நிதியமைச்சர் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீண்ட திட்டமிடலுக்குப் பிறகே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரிச்சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை கட்சிகள் புறக்கணிப்பது சரியான செய்கை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com