ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோளான ஜிசாட்-17, பிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து ஏரியான்-5 VA-238 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.29 மணிக்கு ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 41வது நிமிடத்தில் ஜிசாட் 17 செயற்கைக்கோள் வெற்றிகரமாகப் பிரிந்தது. இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் ஆகும்.

இதுவரை நாம் அதிகபட்சமாக 3.2 டன் கொண்ட செயற்கைக்கோளைத்தான் விண்ணில் செலுத்தியிருக்கிறோம். ஜிசாட்-17 அதற்கு மேல் எடைகொண்ட செயற்கைக்கோள் என்பதால் ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 477 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com