குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு கடைசிப் பயணம்: பிரணாப் உருக்கம்

நாட்டின் குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு வருகை தந்தது, இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு கடைசிப் பயணம்: பிரணாப் உருக்கம்

நாட்டின் குடியரசுத் தலைவராக கொல்கத்தாவுக்கு வருகை தந்தது, இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அவர், கொல்கத்தாவில் வசித்திருக்கிறார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக பல முறை அவர் கொல்கத்தாவுக்கு வந்திருக்கிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக அவர், வியாழக்கிழமை கொல்கத்தாவுக்கு வருகை தந்தார்.
அங்குள்ள தேசிய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், முதல் திட்டக் குழுவின் (மத்தி கொள்கைக் குழுவின் முந்தைய பெயர்) உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் பி.சி.மஹலானோபிஸின் 125-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், குடியரசுத் தலைவர் என்ற முறையில் கொல்கத்தாவுக்கு வருவது இதுவே எனக்கு கடைசிப் பயணமாக இருக்கக் கூடும்.
எனது பதவிக் காலம் முடிவடைய இருக்கும் இந்த தருணத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அறிவார்ந்த சமூகத்தினர் மத்தியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்கு முதலில் மகிழ்ச்சியடைகிறேன்.
கொள்கைகளில் பிடிவாதமாக இருப்பதும், வளைந்து கொடுக்காத தன்மையும் நமது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மிகப்பெரிய தடையாக உள்ளன. புதிய கொள்கைகளை ஒருவர் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும். பிறகு அவற்றை ஆய்வுசெய்து பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
1991-ஆம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகளால், பொதுத் துறை நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தன என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com