சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் குறைந்தது

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பணத்தை டெபாசிட் செய்வது சமீப ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் குறைந்தது

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பணத்தை டெபாசிட் செய்வது சமீப ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் இந்தியர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியால், அங்குள்ள வங்கிகளின் பணத்தை வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை மத்திய அரசுக்குத் தர அந்நாடு அண்மையில் ஒப்புக் கொண்டது. ஆனால், இந்த விவரத்தை பகிரங்கமாக வெளியிடக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.
இந்நிலையில் தங்கள் நாட்டு வங்களில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் குறித்த விவரத்தை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2016-ஆம் ஆண்டு கணக்குப்படி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.4,500 கோடி உள்ளது. இதுவரை சுவிஸ் வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்தப் பணத்தில் இது மிகவும் குறைவான தொகையாகும். இதற்கு முன்பு கடந்த 2006-ஆம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் ரூ.23,000 கோடியை இந்தியர்கள் வைத்திருந்ததே அதிகபட்சமாகும்.
அதே நேரத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் சுவிஸ் வங்கிகளில் இருந்து 45 சதவீதத் தொகையை இந்தியர்கள் எடுத்துவிட்டனர். 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011,2013-ஆம் ஆண்டுகளில் மட்டும்தான் இந்தியர்களின் சுவிஸ் வங்கி டெபாசிட் அதிகரித்துள்ளது. மற்ற ஆண்டுகளில் பணத்தை குறைவாகவே டெபாசிட் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com