5 மாதத்தில் அசுர வளர்ச்சி கண்ட சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது.
5 மாதத்தில் அசுர வளர்ச்சி கண்ட சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு


ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடியில் இருந்து கடந்த 5 மாதத்தில் ரூ.330 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையின் நியமன உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நாரா லோகேஷ், அம்மாநிலத்தின் மிகப் பணக்கார அரசியல்வாதிகளின் பட்டியலில்  முன்னிலை வகிக்கிறார்.

நியமன உறுப்பினருக்கான தேர்தலுக்காக லோகேஷ் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.329.52 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ரூ.273.84 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.56.52 கோடி அசையா சொத்துக்கள்.

தற்போது தேர்தல் ஆணையத்திடம் லோகேஷ் அளித்துள்ள சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை விட பல மடங்கு அதிகமாகும்.

ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, கடந்த சில வருடங்களாக தங்களது குடும்ப சொத்து மதிப்பை மக்களுக்கு வெளியிட்டு வந்தார். அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் வெளியான தகவலில் லோகேஷ் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடிதான்.  அதோடு, சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களின் மொத்த சொத்து மதிப்பே ரூ.74 கோடிதான். ஆனால், தற்போது லோகேஷின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 20 மடங்காக உயர்ந்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள லோகேஷ், தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி நான் எனது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளேன். 5 மாதங்களுக்கு முன்பு பழைய மதிப்பில் இருந்தது. எவ்வளவே என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com