காணாமல் போன இந்தியாவின் சந்திரயான் : கண்டுபிடித்துக் கொடுத்தது நாசா!

பஸடென்னா (அமெரிக்கா): சந்திரனைக் குறித்து ஆராய அனுப்பப்பட்டு  விண்வெளியில் தொலைந்து போன இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தை
காணாமல் போன இந்தியாவின் சந்திரயான் : கண்டுபிடித்துக் கொடுத்தது நாசா!

பஸடென்னா (அமெரிக்கா): சந்திரனைக் குறித்து ஆராய அனுப்பப்பட்டு  விண்வெளியில் தொலைந்து போன இந்தியாவின் சந்திரயான்  விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டறிந்துள்ளது.    

நிலவினை குறித்து ஆராய்வதற்காக சந்திரயான்  - 1 என்னும் விண்கலத்தை 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா ஏவியது. நிலவினைக் தொலைவு உணர்வு முறையில் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஆராய்வதற்காகவும்,  வேறுபட்ட தொலை நிலைகளில் புகைப்படங்கள் எடுத்து நிலவு பற்றிய ஒரு முப்பரிமான வரைபடம் ஒன்றை உருவாக்குவதுமே இதன் அடிப்படை நோக்கமாகும்.  

ஆனால் சில ஆரம்ப கட்ட தகவல்களுக்குப் பிறகு ஆகஸ்ட்-2009  முதல் சந்திரயானுடனான ரேடியோ தகவல் தொடர்பு முற்றிலும் நின்று போனது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் தன்னுடைய புதிய வகை  நில ஆய்வு ரேடார் ஒன்றை பயன்படுத்தி சந்திரனைச் சுற்றி வரும் இரண்டு ஆளில்லா விண்கலங்களை கண்டறிந்துள்ளது. அவை அமெரிக்காவின் 'லூனார் ரிகன்னசைன்ஸ் ஆர்பிட்டர்' மற்றும் சந்திரயான் -1 ஆகிய இரண்டுமாகும்.    

அளவில் மிகச் சிறியதான இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலத்தை மீண்டும் கண்டறிந்தது ஒரு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை நாசாவின் விண்வெளி ஆய்வு மைய ரேடார் விஞ்ஞானி மரீனா ப்ரோசோவிக் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com