பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு திரும்பும் காங்கிரஸ்!

எல்லைப்புற மாநிலமான பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக்  கைப்பற்றுகிறது.
பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு திரும்பும் காங்கிரஸ்!

சண்டிகர்: எல்லைப்புற மாநிலமான பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக்  கைப்பற்றுகிறது.

பஞ்சாபில் சிரோண்மனி அகாலி தள்  - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு போட்டிக்கு தில்லியின் ஆளும்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் குதித்தது.அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் சார்பில் கேப்டன் அம்ரீந்தர் சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பபஞ்சாபில் கடுமையான போட்டியிருக்கும் என்று முடிவுகளை வெளியிட்டன. ஆனால் இன்று காலை தேர்தல் முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கபட்டவுடன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 64 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

ஆளும் சிரோண்மனி அகாலி தள்  - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 28 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியானது 25 இடங்களுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

மொத்தமுள்ள 117 இடங்களில் பெரும்பான்மை பெற 59 இடங்களைப்பெற்றால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது, அந்த வகையில் 64 இடங்களுடன் பஞ்சாபில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியைக்  கைப்பற்றுவது உறுதியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com