காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல்: ராணுவம் பதிலடி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பிம்பேர் கலி, பாலாகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பிம்பேர் கலி, பாலாகோட் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இதுகுறித்து, ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பிம்பேர் கலி, பாலாகோட் கிராமங்களையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும்வகையில் பாகிஸ்தான் ராணுவப் படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மோர்ட்டார் ரக பீரங்கிகளையும், தானியங்கி ஆயுதங்களையும் பயன்படுத்தி அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களுக்கு நமது படை வீரர்கள் தகுந்த பதிலடியைக் கொடுத்தனர் என்றார் அவர்.
பூஞ்ச் - ரஜௌரி வட்டத்துக்கு உள்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அமைந்துள்ள பகுதியில் கடந்த 11 நாள்களில் நிகழும் 5-ஆவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இதேபோல், கடந்த 9 மற்றும் 13-ஆம் தேதிகளில் பூஞ்ச் பகுதியிலும், கடந்த 12-ஆம் தேதி கிருஷ்ணாகாட்டி பகுதியிலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த 9-ஆம் தேதி பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற தாக்குதலின்போது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com