சாரதா, நாரதா முறைகேடு விவகாரங்கள்: மம்தா பானர்ஜியை சிபிஐ விசாரிக்க வேண்டும்

சாரதா நிதி நிறுவன மோசடி, நாரதா இணையதளத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்று விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சாரதா, நாரதா முறைகேடு விவகாரங்கள்: மம்தா பானர்ஜியை சிபிஐ விசாரிக்க வேண்டும்

சாரதா நிதி நிறுவன மோசடி, நாரதா இணையதளத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்று விடியோ வெளியான விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடமும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா (படம்) பேசியதாவது:
சாரதா நிதி நிறுவன மோசடி, நாரதா இணையதள விடியோ விவகாரம் குறித்து சிபிஐ மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேற்கண்ட் 2 ஊழல் விவகாரங்களிலும் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ உடனடியாக கைது செய்ய வேண்டும்.
முதல்வர், திரிணமூல் கட்சித் தலைவர்கள், மாநில அமைச்சர்கள் ஆகியோரை சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். நாரதா இணையதள விடியோ விவகாரம் குறித்து திரிணமூல் காங்கிரஸ் தற்போது கருத்து தெரிவிக்கும்போது, கட்சிக்கு அந்தப் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. ஆனால், முதலில் அந்த விடியோவை போலியானவை, சித்திரிக்கப்பட்டவை என்று குற்றம்சாட்டியது. இதன்மூலம், முந்தைய கருத்தை அக்கட்சி தற்போது மாற்றிக் கொண்டுவிட்டது என்பது நிரூபணமாகிறது.
மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆதரவு அளித்துள்ளார். இதன்மூலம், பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் ரகசிய ஒப்பந்தம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அரசியல் விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே இருக்கும் உடன்பாடு, சிபிஐ விசாரணையை பாதிக்காது என்றும், சிபிஐ சுதந்திரமாக விசாரணை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது என்றார் சூர்ய காந்த் மிஸ்ரா.
சிபிஐ விசாரணை தொடக்கம்: நாரதா இணையதளத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கும்போது ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் வெளியானது குறித்து முதல்கட்ட விசாரணை நடத்த சிபிஐ அமைப்புக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, முதல்கட்ட விசாரணைக்கான அறிக்கையை சிபிஐ திங்கள்கிழமை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com