வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தாலோ, பணம் டெபாசிட் செய்தாலோ வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதென்ற வங்கிகளின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமன்றி பாஜக உறுப்பினரும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தாலோ, பணம் டெபாசிட் செய்தாலோ வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதென்ற வங்கிகளின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமன்றி பாஜக உறுப்பினரும் வலியுறுத்தியுள்ளார்.
ஹெச்.டி.எஃப்.சி., ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலும், பணம் டெபாசிட் செய்தாலும் குறைந்தபட்சம் ரூ.150 கட்டணம் வசூலிக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களவையில் இந்த விவகாரத்தை பாஜக எம்.பி. அனுராக் தாக்குர் திங்கள்கிழமை எழுப்பினார். அப்போது அவர் பேசியபோது, வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றார். இதேபோல், கடன் அட்டை (கிரெடிட் கார்டு) பரிவர்த்தனைகள் மீது 3 சதவீத வரி வசூலிப்பதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதே கருத்தை மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.கே. ராகேஷ் வலியுறுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
சேமிப்பு கணக்குகளில் மாதாந்திர இருப்புத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரமாக பாரத ஸ்டேட் வங்கி உயர்த்திவிட்டது. இதை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் முடிவால், நாட்டு மக்கள் 31 கோடி பேர் பாதிக்கப்படுவர். அதுவும் ஏழை மக்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுவர். நிதி மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், அப்பாவி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. இது நாட்டு நலனுக்கு நல்லது அல்ல. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முடிவை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கே.கே. ராகேஷ் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com