பசு வதையில் ஈடுபடுவோரின் கைகளை வெட்டுவேன்

பசுக்களை கொல்வோர் மற்றும் அவமதிப்போரின் கை, கால்களை வெட்டப் போவதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பசுக்களை கொல்வோர் மற்றும் அவமதிப்போரின் கை, கால்களை வெட்டப் போவதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் அந்த மாநிலத்தின் அமைச்சர் சுரேஷ் ராணாவுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் விக்ரம் சைனி கலந்து கொண்டு பேசியதாவது:
"வந்தே மாதரம்' என்று சொல்ல மறுப்பவர்கள், "பாரத மாதா கீ ஜே' என்று சொல்வதை துன்பமாக கருதுபவர்கள் மற்றும் பசுவை தாயாக கருதாமல் அதை கொல்பவர்கள் ஆகியோரின் கைகள் மற்றும் கால்களை வெட்டுவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
இந்த வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எங்களிடம் இளைஞர்களைக் கொண்ட குழு உள்ளது என்று விக்ரம் சைனி கூறினார்.
முசாஃபர்நகர் மாவட்டத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நேரிட்ட கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் விக்ரம் சைனியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோரக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, அந்த மாநிலத்தில் பசு கடத்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், சட்ட விரோத கால்நடை வதைக் கூடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேநேரத்தில், சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் கால்நடை வதைக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com