மார்ச் 31 வரை பழைய நோட்டுகளை ஏற்காதது ஏன்?

செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை? என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ர
மார்ச் 31 வரை பழைய நோட்டுகளை ஏற்காதது ஏன்?

செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை இந்த மாதம் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கவில்லை? என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
பொதுமக்கள் தங்களிடமுள்ள அந்த நோட்டுகளை மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை மாற்றிக் கொள்ளலாம் என்று அப்போது அவர் கூறினார்.
எனினும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் மட்டுமே மார்ச் மாதம் 31-ஆம் தேதிவரை பழைய செல்லாதவையாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும், இந்தியர்கள் அனைவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குப் பிறகு அந்தப் பணத்தை வங்கியில் செலுத்த முடியாது எனவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் விசாரணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய மக்கள் தொடர்பு அதிகாரி சுமன் ரே கூறியதாவது:
ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான தேதி தொடர்பாக அரசு மேற்கொண்ட முடிவுக்கான காரணம் குறித்து அந்த ஆர்டிஐ மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ சட்டம், பிரிவு 2(எஃப்)-இன்படி, அரசின் முடிவுக்கான காரணம் என்பது "தகவல்' என்ற வரையறைக்குள் வராததால், அந்த மனுவுக்குப் பதிலளிக்க முடியாது என்றார் அவர்.
ஏற்கெனவே, ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு முன்னர், அதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பொருளாதார ஆலோசகரிடம் அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதா என்ற ஆர்டிஐ கேள்விக்கும் பதிலளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
மேலும், ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் முடிவை எடுப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பை வெளியிடவும் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com