BS-3 வாகன விற்பனை மற்றும் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை: வழக்கும் தீர்ப்பும்

பாரத் ஸ்டேஜ் -4 (BS- 4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்ய முடியாது என்று நீதிபதி. மதன் பி லோகூர் தலைமையிலான
BS-3 வாகன விற்பனை மற்றும் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை: வழக்கும் தீர்ப்பும்

பாரத் ஸ்டேஜ் -4(BS- 4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை செய்ய முடியாது என்று நீதிபதி. மதன் பி லோகூர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன.

வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ்-3 (BS-3) என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது.

இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010-முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில்,  தங்களிடம் பிஎஸ் 3 விதிமுறைகளுடன் கூடிய 8 வாகனங்கள் 8,24,275 விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும் , அதில் 96,724 கம்மெர்ஷியல் வாகனங்கள், 6,71,308 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 40048 மூன்று சக்கர வாகனங்கள் ஆகும். இவற்றின் சந்தை மதிப்பு 12,000 கோடி ஆகும்.இத்தகைய வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

ஆட்டோமொபைல் தொழிலைவிட மக்களின் ஆரோக்கியமே முக்கியம் என்று கூறிவிட்டது. இந்த மனுவுக்கு சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், 2005 மற்றும் 2010ல் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஸ்டாக்கில் இருந்த பழைய வாகனங்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டது என கார் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல், 1-ம் தேதி முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க (SIAM) தலைவர் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவன செயல் தலைவர் வினோத் K தாசரி குறிப்பிடுகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடும் விதிகளை விரைவில் செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் EURO-4 நடைமுறைபடுத்த 13 அண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் இந்தியா 10 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தி விட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த தாமதமும் BS-4 எரிபொருள் கிடைக்காதே காரணம் என்றார்.

மேலும் குறைந்த செலவில் BS-3 ஐ BS_4 ஆக மாற்றமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

BS-3 மற்றும் BS_4 என்பது என்ன?


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வாகன புகைபோக்கில் சில விதிமுறைகளை விதித்துள்ளது, அதன்படி 1998-லிருந்து படிப்படியாக BS-4 வரை வெளியிடும்கார்பன் மோனாக்ஸைடு(CO), ஹைட்ரோ கார்பன்கள்(HC), மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடுகள்(NO) மற்றும் துகள் பொருட்களின்(particulate matter) அளவீடுகள் பற்றி குறிப்பிடுகின்றது.

கார்கள்

கனரக வாகனங்கள்

2, 3 சக்கரவாகனங்கள்

தீர்ப்பு வந்த இரு நாட்களில் வாகன விலை கடும் வீழ்ச்சியில் உள்ளது. சலுகை விற்பனையும் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

C.P.சரவணன்,
வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com