பசுவைக் கொன்றால் இனி ஆயுள் தண்டனை; ஒரு லட்சம் அபராதம்: சட்டம் போட்டது குஜராத் அரசு!

பசுவைக் கொன்றால் இனி ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என குஜராத் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
பசுவைக் கொன்றால் இனி ஆயுள் தண்டனை; ஒரு லட்சம் அபராதம்: சட்டம் போட்டது குஜராத் அரசு!

அஹமதாபாத்: பசுவதை செய்வோருக்கு இனி ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என குஜராத் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் வெள்ளியன்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட த்திருத்தமானது பசு வதைக்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்தியுள்ள்ளது. இது குறித்து வந்துள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னதாக பசு வதையில் ஈடுபடுவோருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் படியான சட்டம்  நடைமுறையில் இருந்தது. தற்பொழுது அது ஆயுள் தணடனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கூடுதலாக ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பசு கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனமானது நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படும்.

முன்னதாக மோடி குஜராத் முதல்வராக இருந்த பொழுது 2011-ஆம் ஆண்டில், 1954-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குஜராத் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, பசுக்களை கடத்துதல் மற்றும் வதை செய்வது முழுமையாக தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com