ம.பி. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஷிவ்ராஜ் சௌஹான்

மத்தியப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை, முதல்வர் ஷிவ்ராஜ் சௌஹான் பரிமாறினார்.
ம.பி. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் ஷிவ்ராஜ் சௌஹான்

போபால்: மத்தியப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சர்களுக்கு, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை, முதல்வர் ஷிவ்ராஜ் சௌஹான் பரிமாறினார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் போபாலில் மாநில அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தை நிதியாண்டாக அறிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே, மாநிலத்தில் வரும் டிசம்பர், ஜனவரி மாதத்தில் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும்.

'இந்த நிதியாண்டு டிசம்பர் மாதத்துடன் முடித்துக் கொள்ளப்படும். அடுத்த பட்ஜெட் டிசம்பர் அல்லது ஜனவரியில் தாக்கல் செய்யப்படும்' என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில நிதியமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் அமைச்சர்கள் அனைவரும், தங்களது வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்து வருமாறு முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் அறிவுறுத்தியிருந்தார்.

அதனால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த 20 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் தத்தமது ஊர்களின் சிறப்பு உணவுகளை வீட்டில் இருந்து எடுத்து வந்தனர்.

அதோடு, அம்மாநில பெண் அமைச்சர் லலிதா யாதவ், அனைத்து அமைச்சர்களுக்கும் சேர்த்து தங்களது பாரம்பரிய உணவான பந்தெல்கான்டி என்ற உணவை எடுத்து வந்திருந்தார். உருளைக் கிழங்கு, பச்சைக் காய்கறிகள், அரிசி, பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த உணவை உட்பட எடுத்து வரப்பட்ட உணவுகளை அமைச்சர்களுக்கு முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகானே பரிமாறினார்.

அரசின் செலவை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையாக சௌஹான் அரசு மேற்கொண்ட இந்த நடைமுறை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது வீட்டு உணவை எடுத்து வந்து ஒரே இடத்தில் பகிர்ந்து சாப்பிடும் போது, அனைவரும் ஒரே குடும்பம் போல உணர்வதாக லலிதா யாதவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com