ரூ.500 கோடி நிர்பயா நிதியில் 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா

ரூ.500 கோடி நிர்பயா நிதியில் இருந்து நாட்டில் உள்ள 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராவைப் பொறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு
ரூ.500 கோடி நிர்பயா நிதியில் 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா

புது தில்லி: ரூ.500 கோடி நிர்பயா நிதியில் இருந்து நாட்டில் உள்ள 983 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராவைப் பொறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில் நிலையப்பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. மொத்தம் 19 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படவுள்ளன.

முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பெண்களில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 கோடி நிர்பயா நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

ரயில்வே நடைமேடைகள், ரயிலுக்காக காத்திருக்கும் இடங்களை இந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ரயில் நிலைய மேலாளரும் சிசிடிவி கேமரா மூலம் நிகழ்வுகளைக் கண்காணிப்பார்.

நாட்டில் மொத்தம் 8000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால், இதுவரை 344 ரயில் நிலையங்களில் மட்டுமே சிசிடிவி உள்ளது. இப்போது கூடுதலாக 983 ரயில் நிலையங்களில் இந்த வசதி உள்ளது.

ரயில் நிலையங்களில் மட்டுமல்லாத ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களிலும் இப்போது சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

"சிசிடிவி கேமரா எங்களுக்கு ஒரு பெரிய உதவியாகவும், விளம்பர பலகையில் 'நீங்கள் கண்காணிப்பில் இருக்கிறீர்கள்' என்ற அறிவிப்பின் மூலம் குற்றவாளிகளின் மனதில் ஒரு முன்தடுப்பு எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது என அதிகாரி கூறினார்.

மேலும், சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு ஒரு நிலையான கண்காணிப்பு மட்டுமல்லாமல், பிந்தைய நிகழ்வின் குற்றவியல் விசாரணைக்கும் உதவுகிறது என தெரிவித்தனர்.

ஷான்-இ-பஞ்சாப் எக்ஸ்பிரஸ் முழுமையாக கணினி மையமாக்கப்பட்டிருந்தாலும், மும்பை புறநகர் சேவைகளின் சில பெண்கள் பெட்டிகள் ஒரு பைலட் திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. ஹம்சாபார் எக்ஸ்பிரஸ் மற்றும் வரவிருக்கும் தேஜாஸ் சேவைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com