உ.பி. சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அந்த மாநில சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடியது. சட்டப்பேரவை மற்றும் மேலவைக் கூட்டுக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ராம் நாயக் உரையாற்றினார். அதன் பிறகு, சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மசோதா தாக்கலுக்குப் பிறகு, சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஜிஎஸ்டி பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் ஜிஎஸ்டி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம், வரி வசூலிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து எம்எல்ஏ-க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்பட்சத்தில், இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மாநிலங்களின் எண்ணிக்கை 13-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com