ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?

வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், என்னென்னப் பொருட்களின் விலைகள் குறையும் என்று பார்க்கலாம்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?


ஸ்ரீநகர்: வரும் ஜூலை மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால், என்னென்னப் பொருட்களின் விலைகள் குறையும் என்று பார்க்கலாம்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு நாள் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை தொடங்கியது. 

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 80 முதல் 90 சதவீதம் வரையிலான பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நான்கு விதமான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.

5, 12, 18 மற்றும் 28 சதவீதங்களில் நிர்ணயிக்கப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள், அன்றாடம் பயன்படும் அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது கோரிக்கைகள் குறித்தும், எஞ்சியுள்ள பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறித்தும் கூட்டத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யப்படும்.

விலை குறையும் பொருள்கள்: பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் மீதான வரியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மொத்தம் 1211 பொருட்களுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டது. இதில், 81 சதவீத பொருட்களுக்கு 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது.

குறிப்பாக பால் மற்றும் தயிருக்கு வரிவிலக்கு அளிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அரிசி, கோதுமை, காபித் தூள், தேயிலை, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவற்றின் மீது குறைந்தபட்ச வரி விதிப்பு மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சட்டம் அமலான பிறகு அப்பொருள்களின் விலை கணிசமாகக் குறையக்கூடும்.

இதேபோன்று, கூந்தல் தைலம், சோப்பு, டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் மீதான 28% வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.

பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மீதான வரி 31-32ல் இருந்து 28 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. 

அதே போல, 350 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் சில பொருட்களுக்கான வரி குறித்தும், வரி விலக்கு பெறும் பொருட்கள் குறித்தும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com