ஜாதவை பாகிஸ்தான் விடுவிக்கும்: இந்திய கம்யூனிஸ்ட் நம்பிக்கை

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் விடுதலை செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் விடுதலை செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியர் குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் அத்துமீறி நுழைந்து உளவு வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இந்தியா சார்பில் நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில், வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை ஜாதவ் தூக்கிலிடப்படக் கூடாது என்று அந்த நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
குல்பூஷண் ஜாதவ் குறித்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை வரவேற்கிறோம். இனியாவது பாகிஸ்தானுக்கு நல்ல புத்தி ஏற்பட்டு குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்யட்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com