பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவுக்காக

இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் சார்பில் வாதாடிய வழக்குரைஞர், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவுக்காக வாதாட நியமிக்கப்பட்டவர் எனவும், இது காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் ஆதரவு நிலையைக் காட்டுவதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், தில்லியில் சனிக்கிழமை கூறியதாவது:
சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்குரைஞர் காவர் குரேஷி.
பாகிஸ்தான் நாட்டவரான இவரைத்தான், அமெரிக்காவின் "என்ரான்' நிறுவனத்துக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் இந்தியா சார்பாக வாதாட நியமிக்கப்பட்டார்.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த வழக்கில், இந்தியாவுக்காக வாதாட அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு இந்திய வழக்குரைஞர்கள் யாருமே கிடைக்கவில்லையா?
காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் ஆதரவு நிலையையே இது காட்டுகிறது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற துல்லியத் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்களில், பாகிஸ்தானின் கருத்துகளையே காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களான சல்மான் குர்ஷித், மணிசங்கர் ஐயர் உள்ளிட்டோர் வெளிப்படுத்தி வந்தனர் என்றார்
நரசிம்ம ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com