பாபர் மசூதி இடிப்பு வழக்கு: லக்னௌ சிபிஐ நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியை இடித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 5 பேர், லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருக்கும் பாபர் மசூதியை இடித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 5 பேர், லக்னௌவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர்.
லக்னௌவின் இந்திராநகர் பகுதியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 6 நபர்களுக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்கள் சம்பத் ராய், வைகுந்த் லால் சர்மா, மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், தர்மதாஸ் மகராஜ் ஆகிய 5 பேர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தனர்.
சிவசேனை கட்சி நிர்வாகியும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 6ஆவது நபருமான சதீஸ் பிரதான் ஆஜராகவில்லை. அடுத்தவாரம் அவர் சரணடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 5 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com