ஹோட்டலில் வாங்கிய இட்லி; தலித் வீட்டில் 'செட்டப்' சாப்பாடு: சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா!

கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா, வெளியே ஹோட்டல் ஒன்றில் வாங்கி வந்த இட்லியை, தலித் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் வைத்து சாப்பிட்ட விவகாரம்... 
ஹோட்டலில் வாங்கிய இட்லி; தலித் வீட்டில் 'செட்டப்' சாப்பாடு: சர்ச்சையில் சிக்கிய எடியூரப்பா!

பெங்களூரு: கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா, வெளியே ஹோட்டல் ஒன்றில் வாங்கி வந்த இட்லியை, தலித் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் வைத்து சாப்பிட்ட விவகாரம், தற்பொழுது புதிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கர்நாடக மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவரான எடியூரப்பா, சமீபத்தில் சுற்றுப்பயணம் ஒன்றின் பொழுது   கர்நாடக மாநிலம் துமாகூர் மாவட்டத்தில், தலித் தொண்டர் ஒருவர் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டார் அப்பொழுது அவர் சாப்பிடும் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள செய்திதான் எடியூரப்பாவுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. விஷயம் என்னவென்றால் எடியூரப்பா தலித் சமூக தொண்டர் வீட்டிற்கு சென்றபோது, அவருக்கு என்று தனியாக உயர்தர ஓட்டலில் இருந்து வாங்கி வரப்பட்ட இட்லிதான் பரிமாறப்பட்டது என்பதே அது. அவருடைய இந்த செய்கையானது தற்பொழுது கர்நாடக மாநில அரசியல் கட்சிகளால கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அத்ததுடன் எடியூரப்பா மற்றும் பிற பா.ஜனதா கட்சினருக்கு எதிராக காவல்துறையிடம் புகாரும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா மாநில செய்தித் தொடர்பாளர் பேசும் பொழுது எடியூரப்பாவுக்காக ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வரப்பட்டதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் கூறும்பொழுது “எடியூரப்பாவிற்கு இட்லி மற்றும் வடை என்றால் அதிகம் பிடிக்கும், எனவேதான் அவை ஓட்டலில் இருந்து வாங்கி வரப்பட்டது. அத்துடன் தலித் சமூகத்தினர் வீட்டில் செய்யப்பட்டு இருந்த உணவையும் அவர் சாப்பிட்டார்.” என்று தெரிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் பிரியாங் கார்க்கே இது தொடர்பாக பேசுகையில், “அரசியல்வாதிகள் தலித் சமூகத்தினர் வீட்டுக்கு சென்று இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தலித் சமூக மேம்பாட்டிற்கு உண்மையாகவே உழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

எடியூரப்பாவின் இந்த செயல்பாடு தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com