பெரு விவசாயிகளுக்கு வருமான வரி: பிமல் ஜலான்

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் ஈட்டும் விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் யோசனை தெரிவித்துள்ளார்.
பெரு விவசாயிகளுக்கு வருமான வரி: பிமல் ஜலான்

குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் ஈட்டும் விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் யோசனை தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் 2003-ஆம் ஆண்டு வரை இருந்தவர் பிமல் ஜலான். அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு வரி விதிக்கலாமா, வேண்டாமா என்று கேட்டால், அதிக பரப்பளவில் விவசாய நிலங்களையும், பண்ணைகளையும் வைத்து, அவற்றின் மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈட்டப்படும் வருமானத்துக்கு வரி விதிப்பதில் தவறில்லை.
ஆனால், அதே நேரம், இந்த வரி விதிப்பால் சிறு விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது. இந்தியாவில் மிகப் பெரும்பான்மையானவர்கள் சிறு விவசாயிகள்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் அதிக அளவிலும், பணவீக்கம் குறைவாகவும் இருப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனையாகக் கருதலாம்.
ஆனால், ஊழலை ஒழிப்பதிலும், சிக்கலான நிர்வாகக் கட்டமைப்பை சீரமைப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
என்னைப் பொருத்தவரை, இந்திய வங்கித் துறை வலிமையானதாகவே உள்ளது என்றார் பிமல் ஜலான்.

இதுகுறித்து தில்லியில் அகில இந்திய வானொலியின் வெளிப்புற சேவைகள் பிரிவு இயக்குனர் அம்லான் ஜோதி மஜும்தார் கூறியதாவது:
அகில இந்திய வானொலியின் ஹிந்தி மற்றும் வெளிநாட்டு சேவைகள் ஒளிபரப்பு, 150 நாடுகளில் ஒளிபரப்பாகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, தமது தாய் நாட்டின் பிரதமர் நிகழ்த்தும் உரையைக் கேட்பதற்கு வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
பிரதமரின் வானொலி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய வானொலிக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன. இதில் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் குஜராத் மாநிலத்தவரிடம் இருந்து அதிக அளவில் கடிதங்கள் வருகின்றன.
இதேபோல், வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் இருந்தும் பிரதமரின் நிகழ்ச்சி தொடர்பாக கடிதங்கள் வருகின்றன. உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு மதிப்பிழக்கச் செய்தபோது, உள்நாட்டில் குறிப்பிட்ட பிரிவினர் இதை விமர்சித்தனர். ஆனால், வெளிநாடுகளைச் சேர்ந்த நேயர்களோ, ஊழலை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று வரவேற்பு தெரிவித்தனர் என்றார் மஜூம்தார்.
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் அகில இந்திய வானொலியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் உரையாற்றி வருகிறார். இது, ஹிந்தி மொழியில் நேரடியாக ஒளிபரப்படுகிறது. இதன் மொழியாக்கம், ஆங்கிலத்தில் ஒளிபரப்படுகிறது. இந்த உரையின் சில பகுதி, ரஷிய, பிரெஞ்சு, உருது, சீன மொழிகளில் ஒளிபரப்பா
கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com